Friday, 29 February 2008

காதல் கவிதை

அன்பே...!
வந்து வந்து போகும் நிலவால்
வானம் தேய்வது இல்லை

வந்து வந்து போகும் அலையால்
கரை நோவது இல்லை

வந்து வந்து போகும் மழையால்
பூமி மாறுவது இல்லை

வந்து வந்து போகும் உன் நினைவால்
நான் மட்டும் எப்படி மாறிப் போகிறேன்...!

வாய் திறவாமலே சிரிக்கிறேன்
விழி மூடாமலே தூங்குகிறேன்
பாதம் போகாமலே நடக்கிறேன்
பாவம் அன்பே நான்
புயலில் சிக்கிய
பூவாய் தவிக்கிறேன்...!

உன்னை பார்த்த ஒரு நொடியில்...!
என் மூலையில் பூகம்பம்
என் இதயத்தில் இடிமின்னல்
என் உள்ளத்தில் வெள்ளப்பெருக்கு
என் இரத்தத்தில் சுனாமி
ஆம் அன்பே
இவை அனைத்தும்
என் உடம்பில்
நிகழும் பருவ மாற்றங்கள்
காரணம்...!
அனைத்துக்கும் உன்
பார்வை கோலங்கள்

அந்த இயற்கைக்கே
இல்லாத சக்தி..!?
உன் பார்வைக்கு
மட்டும் எப்படி...?!

அன்பே...!
எனக்கு பிடித்த கவிதை - உன் பெயர்
எனக்கு பிடித்த ஜீவன் - நீ
என்னக்கு பிடித்த மொழி - உன் மௌனம்
எனக்கு பிடித்த உலகம் - உன் நினைவுகள்

ஆனால்...!
உனக்கு பிடித்தவை
என் கவிதைப் பூக்களும்
என் கல்லறையும் தான்
என்பதை
நீ சொல்லாமலே
புரிந்துகொண்டேன் அன்பே..!

விடைபெறும் என் உயிருக்கு
விலைமதிப்பில்லாத வாழ்த்துகலாய்
உன் ஒருத் துளி கண்ணிராவது....!?


- வல்லம்படுகை.ச.பால்ராஜ்.






No comments: