Friday, 29 February 2008

புறப்படு இளைஞனே...!

புறப்படு இளைஞனே....!
பீனிக்ஸ் பறவையாய்
இந்தப் புத்தாண்டுத் தினத்தில்....

மௌனங்களை உடைத்துவிட்டு
மத மோகங்களை கிழித்துவிட்டு
சாதியப் பேய்களை விரட்டிவிட்டு
சமாதானத்தை பறக்கவிடு
இடையில் யார் வந்தாலும்
அன்புச் சங்கிலியால் புரட்டிஎடு

புறப்படு இளைஞனே...!
பீனிக்ஸ் பறவையாய்
இந்தப் புத்தாண்டுத் தினத்தில்

அமைதி உருவாகும்
அணுகுண்டு வீழ்ந்தப்பின்
யார் இருப்பார்
இந்தப் பூமியில்
வேண்டுமா ....? இந்த அமைதி

அமைதி உருவாகும்
அகிம்சை வழியில் - உன்
அறிவுக் கண் திறந்தப்பின்
யார் இறப்பார்
இந்தப் பூமியில்
வேண்டாமா இந்த அமைதி

புறப்படு இளைஞனே...!
பீனிக்ஸ் பறவையாய்
இந்தப் புத்தாண்டு தினத்தில்....

வெல்வெட்டு போன்று
உன் மனமிருக்க
கல்வெட்டு போன்று
உன் வாழ்க்கை இருக்க
மின்வெட்டு எதற்கு
உன் முயற்சியில்
பாழ்ப்படு போகாதோ
உன் வாழ்க்கை பாதியில்

புறப்படு இளைஞனே..
பீனிக்ஸ் பறவையாய்
இந்தப் புத்தாண்டுத் தினத்தில்....

தென்றல் உண்டு
உனக்கு சுவாசமாய் இருக்க
துணிவு உண்டு
உனக்கு கவசமாய் இருக்க
சூரியன் உண்டு
உனக்கு துணையாய் இருக்க
நம்பிக்கை உண்டா ...?!
நீ இளைஞனாய் இருக்க .

புறப்படு இளைஞனே...!
பீனிக்ஸ் பறவையாய்
இந்தப் புத்தாண்டுத் திணத்தில்

காவிகள் தரித்துக்கொண்டு - நீ
காவியங்கள் எழுத வேண்டாம்
கண்களை மூடிக்கொண்டு
கனவுகள் நீ கான வேண்டாம்
அறிவு கண்களை திறந்து வைத்து
சரித்திரங்கள் ஏற்படுத்து
மனிதச் சமுதாயத்தை
அறவழியில் சீர்ப்படுது

உன்னால் மட்டுமே முடியும்
அது இளைஞனால்
மட்டுமே முடியும்....!!

புறப்படு இளைஞனே...!
பீனிக்ஸ் பறவையாய்
இந்தப் புத்தாண்டுத் தினத்தில்

மின்னலைப் பிடித்து
வளைக்க முடியும்
இன்னலைத் தவிர்த்து
ஜெயிக்க முடியும்
பின் மனிதநேயம்
எப்படி மடித்துப் போகும்...?!

புறப்படு இளைஞனே...!
பீனிக்ஸ் பறவையாய்
இந்தப் புத்தாண்டுத் தினத்தில்...

உலகை ஆட்டிப் படைக்கும்
தீவிரவாதத்தை
உலகையே தின்று வரும்
லஞ்சலாவன்யத்தை
உனக்கே சவாலாய் வரும்
வேளையிலா திண்டாட்டத்தை
உன்னையே நசுக்கி வரும்
அரசியல்வாதியை
மன்னித்துவிடு
அதுவே அவைகளுக்கு
மரண தண்டனை

புறப்படு இளைஞனே...!
பீனிக்ஸ் பறவையாய்
இந்தப் புத்தாண்டு தினத்தில்....

- வல்லம்படுகை.ச.பால்ராஜ்.













1 comment:

Thamizhan said...

உள்ளத்து
உணர்வே
கவிதை!

உணர்வை
வடித்தீர்
வாழ்த்து.

வார்த்தையின்
மையம்
வாழ்வு.

வாழ்வே
சிறக்க
கவிதை.