Friday, 29 February 2008

நட்பு

நண்பா...!
நான் கவிதைகள் எழுதுவது
கனவுப் போல் ஆகிவிட்டது

கனவுகள் என்பது
கடுகு போல் ஆகிவிட்டது
நித்திரை என்பது
சித்திரைப் போல் ஆகிவிட்டது

இருந்தும் எழுதுகிறேன்....
நிலவைப் போல
உன் முகம்
வானம் போல
நம் நட்பு

சிலநாள் கழித்து...
வானில் பார்த்தேன் நிலவை
தெரிந்தது அரைவட்டம்

நினைத்துப் பார்த்தேன்
உன் உருவை
உரைந்துப் போனது
என் இரத்தம் ...!
சிதைத்துப் பார்த்தேன்
என் நினைவை
நிசப்தமாய்
என் இதயம் ...?!

காரணம்...!
அறைவட்டமாய்
போயிருந்தது
உன் முகம்

தொட்டுப் பார்த்தேன்
பணிக்கட்டியாய்
மரத்துப் போயிருந்தது
என் மனம்

மரணத்தை அழைத்தேன்
வந்து போனது
சில கணம்
உயிரை வெறுத்தேன்
அட.. மரணத்திலும்
ஏன் சிக்கனம்
காரணம் நட்பின் தாகம்

இன்னும் சிலநாள் கழித்து....
நிலவும் வரவில்லை
அதன் நிழலும் வரவில்லை
ஆனால்
வானம் மட்டும் அப்படியே...!

- வல்லம்படுகை.ச.பால்ராஜ்.


No comments: