பெண்ணே...!
நீ என்னைக் காதலிக்கிறாயா
நண்பன் சொல்ல கேட்டேன்
பைத்தியகாரப் பெண்
ஊரார் சொல்லக் கேட்டேன்
பாவம் அவள்
உற்றார் சொல்லக் கேட்டேன்
தலைஎழுத்து...
உறவினர் சொல்லக் கேட்டேன்
ஏன் இதெல்லாம் உனக்கு
நீ காதலிப்பதால்
கடிமணம் புரிய நினைப்பதால்...!?!?
நானோ.!?
காகிதக் கவிதைக்கு
உறவுக்காரன்
கனவு வாழ்க்கைக்கு
சொந்தக்காரன்
துன்பத்தின் நிறம்
அறிந்தவன்
இன்பத்தின் குணம்
அறியாதவன்
வசந்தம் என்பதை
காணாதவன்
வாழ்க்கையை என்றோ....
வழியிலேத் தொலைத்தவன்
இது காதலுக்கு
விளக்கம் அல்ல
உன் வாழ்க்கைக்கு
விளக்கம்
அன்பே..!
இருண்டுப்போன
என் வாழ்க்கைக்கு
இறந்தகாலம் தான்
நிகழ்காலம்
தொடங்காத
உன் வாழ்க்கைக்கு
வசந்தகாலம் தான்
எதிர்காலம்
நீ...!
காதல் என்னும்
சடுதிக்கு சாரதியாய்
மாறாமல்
வாழ்க்கை என்னும்
கவிதைக்கு பாரதியாய்
மாறிவிடு
கடலில் விழுந்த
மழைத்துளியாய்
போகாமல்
சிப்பிக்குள் விழுன்த்த
துளி முத்தாய்
மாறிவிடு
புயலில் சிக்கிய
சருகாய் உதிராமல்
பூஜைக்கு உதவும்
பூவாய் மாறிவிடு
துன்பத் தோனிக்கு
ஆராய் இல்லாமல்
இன்பக்கேனிக்கு ஊற்றாய்
மாறிவிடு
துன்பத் தூளியில்
ஆடுவதோ என் வாழ்க்கை
கரையில் துள்ளும்
மீனாய் மாறுவதா
உன் வேட்க்கை
துள்ளிவரும் இல்லம் அருவி நீ
நன்மான நிலத்திலே
பயணம் செய்
இரைகடலே உன்
சங்கமம் ....!!!
இந்த பாலையை
நாடாதே
உன் வாழ்க்கை
பயணம்
பாதியை தாண்டாதே
இதை ஏற்றுகோல் அன்பே
உன் வருங்காலம் இனிக்கும்
மனசைத் தேற்றிகோல் பெண்ணே
உன் வாழ்க்கைக்கு
புதுவடிவம் கிடைக்கும்
ஏன் இந்த நிசப்தம்...!?
மௌனமா உன் மொழி
கண்ணிற்குலமாய் என் விழி
வேண்டாம் எனக்கு வீண்பழி
உன் கரம் பற்றமுடியாது
கானகமே என் வழி....?!?!
- வல்லம்படுகை.ச.பால்ராஜ்
UN
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment